தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் – மதுரையில் மட்டும் 61 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமெடுத்து பரவி வருகிறது. இன்று மட்டும் திருச்சியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக முழுவதும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு மாதத்தில் மட்டும் சுமார் 120-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் 20 குழந்தைகள் உட்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கதிரை அடித்து நொறுக்கிய தர்ஷன்.. அதிர்ந்து போன மொத்த குடும்பத்தினர் – எதிர்நீச்சல் சீரியல் ஷாக்!
அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தொற்று பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை வேகப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த டெங்கு பாதிப்புகள் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.