கதிரை அடித்து நொறுக்கிய தர்ஷன்.. அதிர்ந்து போன மொத்த குடும்பத்தினர் – எதிர்நீச்சல் சீரியல் ஷாக்!
வீட்டில் பெண்களை பார்த்து கதிர் சண்டை போடுவதை தர்ஷன் தாங்கி கொள்ள முடியாமல் கதிரை எதிர்த்து சண்டை போடுவது போல் காட்சிகள் வர உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்:
எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பெண்கள் அனைவரும் சுய தொழில் செய்து வருவதை கண்டுபிடித்துவிட்ட குடும்பத்தினர் இதுதான் சாக்கு என்று அவர்களை மிகவும் மோசமாக திட்டி வருகின்றனர். குணசேகரன் இல்லாத குறையை தீர்க்கும் விதமாக கதிர் மிகவும் கோபத்துடன் வீட்டில் உள்ள மொத்த பெண்களையும் கண்டபடி பேசுகிறார். அதிலும் நந்தினியை அடிக்க கையை ஓங்கி வருகிறார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
இதனை கண்டு பொறுக்க முடியாத தர்ஷன் கதிரை மீண்டும் அடித்து விட்டு, என் அம்மாக்களை பற்றி தவறாக பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விடுகிறார். இதனால் மீண்டும் கதிர் கோபத்துடன் தர்ஷனை அடிக்க வர அப்போது ஈஸ்வரி என் பிள்ளை மேலே கை வைத்தால் நடக்கிறதே வேற என்று சொல்லி கதிருடன் சண்டை போடுகிறார்.
வாட்ஸ்அப் கணக்கை இனி ஹேக் செய்ய வாய்ப்பில்லை – வெளியான புதிய அப்டேட்!
இத்தனை நாட்கள் இப்படி இவர்கள் சண்டை போட மாட்டார்களே என்று கதிர் குழப்பத்துடன் நிற்கிறார். இனிமேல் இந்த வீட்டில் உங்கள் அராஜகம் செல்லுபடி ஆகாது என்று ஈஸ்வரி கதிரை பார்த்து சொல்வதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர்.