வாட்ஸ்அப் கணக்கை இனி ஹேக் செய்ய வாய்ப்பில்லை – வெளியான புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மேலும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப்:
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தினை வழங்கும் பொருட்டு அடுத்தடுத்து ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. அதாவது, வீடியோ கால் மூலமாகவே ஸ்க்ரீன் ஷேர் செய்யும் வசதி, கூடுதல் எமோஜிகள், ஒரே அக்கௌன்ட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கௌன்ட்டை லாகின் செய்யும் வசதி, ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு chat அனைத்தையும் மொத்தமாக QR கோடு மூலமாகவே மாற்றம் செய்யும் வசதி என ஏகப்பட்ட வசதி வழங்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும், இதனையும் தாண்டி வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு இரட்டை பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த பாதுகாப்பு அம்சத்தினை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ‘automatic security code verification’ என்கிற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, வாட்ஸ்அப் மூலமாக பண பரிமாற்றம், சாட்டிங் ஆகியவற்றை செய்யும் போது தானாகவே அக்கௌன்ட்டை verify செய்துகொள்ளும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அப்டேட் தற்போது பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து பயனர்களும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.