
தமிழகத்தில் செப்.18 முதல் மீண்டும் விண்ணப்பம் – மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப் பட்டவர்கள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை:
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு கோடியே 6,50,000 பெண்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அவர்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 1000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. 56 லட்சத்து 60 ஆயிரம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு – மல்லிகை பூ விலை ரூ. 1500-க்கு விற்பனை!
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இவர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், நிராகரிக்கப்பட்டவர்களுக்கான காரணங்கள் பதினெட்டாம் தேதி முதல் எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். காரணங்கள் அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாக காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.