Daily Current Affairs July 16 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 16 2021 in Tamil
Daily Current Affairs July 16 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (SCO)

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெற்றது .
  • இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி யை , இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்
  • இரு நாடுகளின் நட்புறவு பற்றிய முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது

SCO – Shanghai Cooperation Organization

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)

  • தலைமையகம்: பெய்ஜிங், சீனா
  • பொதுச்செயலாளர்: விளாடிமிர் நோரோவ்
  • நிறுவப்பட்டது: 15 ஜூன் 2001
  • உறுப்பினர்கள்: சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்
தேசிய நிகழ்வுகள்

குஜராத்தில் 1500 கோடி மதிப்பிலான திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

  • குஜராத்தில் 1500 கோடி மதிப்பிலான திட்டத்தை நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
  • மேம்படுத்தப்பட்ட காந்தி ரயில் நிலையம் , புதிதாக கட்டப்பட்ட 5 நட்சத்திர விடுதிகள் , புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் ஆகியவற்றை அரசு – தனியார்  பங்களிப்புடன் இந்த  திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

  • ஆந்திரா மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது .
  • இத்தகைய இடஒதுக்கீடு அரசியல் சாசன சட்டத்திருத்தம் 103ன் படி வழங்கப்பட்டுள்ளது
  • ஏற்கனவே ஆந்திரா மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது

பாரம்பரிய மருத்துவ திட்டங்கள் மேம்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

  • AYUSH – பாரம்பரிய மருத்துவ திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றுமத்திய அரசு கூறியுள்ளது
  • மேலும் வடகிழக்கு பாரம்பரிய மருத்துவ கல்வி நிறுவனம் , வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கல்வி நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது .
  • AYUSH – Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homeopathy.
  • AYUSH தலைவர் – சர்பாந்த சோனோவால்

இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது

  • மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின்பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • சட்டப்பிரிவு 340 ன் அடிப்படையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது .
  • இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 11 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இதன் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124-ஏ

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(ஏ) சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு தேவையற்ற கட்டுப்பாட்டை விதிக்கிறது. மேலும் அரசியலமைப்புக்கு எதிரான பேச்சு சுதந்திரத்துக்கும் தடை விதிக்கிறது.
  • மேலும் தேச துரோக குற்றங்களை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124-ஏ கையாளுகிறது . இந்த  பிரிவு அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது .
  • எனவே இந்த சட்டப்பிரிவை எந்த எதிர்ப்பும் இன்றி ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தலைமை தாங்குகிறார்

  • இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தலைமை தாங்கினார். அனைத்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், அதாவது. கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா பங்கேற்றன.

பிரிக்ஸ்

  • நிறுவப்பட்டது: 2009
  • உறுப்பு நாடுகள்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா
  • 2021 தலைவர்: இந்தியா

சர்வதேச மாநாட்டு மையம் வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது.

  • உத்தரபிரதேசம் வாரணாசியில் “ருத்ராக்சன்” என்ற பெயரில்  சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் 128 க்கும் மேல் ருத்ராட்சம் நிறுவப்பட்டுள்ளது.
  • ஒரே நேரத்தில் 1500 பேர் இங்கு பங்கு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .
  • மேலும் கலை ,கலாச்சாரம்,இசை மற்றும் சர்வதேச மாநாடுகள் நடத்துவதற்கும் இங்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

டெல்லி திறன் மற்றும் தொழில் முனைவோர் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் திறனை மேம்படுத்துவதற்கும்  HI-NO-DE அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

  • டெல்லி திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் (DSEU) இந்திய இளைஞர்களுக்கு, குறிப்பாக டெல்லியில் உள்ளவர்களுக்கு பயிற்சி, திறன் மற்றும் இடமளிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி பயிற்சி திட்டத்தை (T.I.T.P.) செயல்படுத்த HI-NO-DE அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த கூட்டாண்மை இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையிலான பரிமாற்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

DSEU– Delhi Skill And Enterpuner University

நீட் தேர்வு மையங்கள்

  • நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் அமைக்கப்படவுள்ளது . விருதுநகர் , திண்டுக்கல் , திருப்பூர் , செங்கல்பட்டு ஆகியனவாகும்.

Try Today Current Affairs Quiz

  • ஏற்கனவே 11 மொழிகளில் நடத்தப்பட்ட தேர்வுகள் மேலும் பஞ்சாபி, மலையாளம் சேர்த்து 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளன என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்

லடாக்  எஸ்.எஸ்.ஓ.சி.ஏ (SSOCA) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

  • பிரம்பிரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் மிஷன் ஆர்கானிக் மேம்பாடு,2025 க்குள் லடாக்கை ஒரு கரிம நிறுவனமாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி ஆகும்

SSOCA – Sikkim State Organic Certification Agency

லடாக்

  • தலைநகரம் : லே
  • லெப்டினன்ட் கவர்னர்: ராதா கிருஷ்ணா மாத்தூர்
மாநில நிகழ்வுகள்

தமிழகத்துக்கு 800 கோடி ரூபாய்  ஒதுக்கீடு

  • கொரோனா நிவாரண நீதியாக முதல்கட்டமாக 800 கோடி ரூபாய் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது
  • தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு புனரமைப்புக்கும், முன்றாம் அலைக்கன தயார் நிலைக்கும் முதல்கட்டமாக 800 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்துக்கு  ஒதுக்கீடு செய்துள்ளதாக  தமிழக நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் : மன் சுக் மண்டாவியா

100 வது பிறந்தநாள் கொண்டாடிய சங்கரய்யா

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார்
  • தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் 100 வயதை எட்டும் சங்கரய்யா, சுதந்திர போராட்ட வீரர், ஹிந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டகளம் கண்டவர், மாணவர் அமைப்பை கட்டமைத்தவர், பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக இருந்தவர், ஜனசக்தி-தீக்கதிர் ஆகியவற்றில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்துள்ளார்.

கீழடி அகழாய்வு

  • சிவகங்கை மாவட்டம் , திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடியில் 7 ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது

TN Job “FB  Group” Join Now

  • இதன் விரிவாக்கமாக அருகே உள்ள மணலூர் , கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு  பணிகள் நடைபெற்று வருகின்றன .
  • அகரத்தில் முதல் முறையாக சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது . மேலும் பண்டையகால தமிழர்கள் பயன்படுத்திய சுடுமண்ணாலான பெண் பொம்மை தற்போது கண்டறியப்பட்டுள்ளது

கண்டறியப்பட்டுள்ள சான்றுகள்

  • கீழடி – தொழிற் நகரம்
  • அகரம் – அண்ணா சத்திரம் (சமையல் தொடர்பான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது)
  • கொந்தகை – பண்டையகால இடுகாடு

ஏ.கே. ராஜன் குழு

  • நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஏ .கே . ராஜன் தலைமையில் குழுவை அமைத்தது.
  • இக்குழு 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை தாக்கல்செய்துள்ளது .
  • கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை, நீட் தேர்வுக்கு முன்பும். பின்பும் எப்படி இருந்தன என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளது

காமராஜர் – ஜூலை 15 – 119 வது பிறந்த தினம்

  • பிறந்த தினம் : 15 ஜூலை 1903
  • இறப்பு : 2 அக்டோம்பர் 1975
  • கர்மவீரர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை (ஜூலை 15)ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி  நாளாக கொண்டாடப்படுகிறது .
  • 2006 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது
  • தமிழகத்தில்1954 முதல் 1963 வரை. தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்
  • கர்மவீரர் , கிங்மேக்கர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • இவரின் அரசியல் குரு – சத்யமூர்த்தி
நியமனம்

பா .ஜ .க  மாநிலங்களவைக் குழு தலைவர் நியமனம்

  • பா .ஜ .க மாநிலங்களவைக் குழு  தலைவராக  மத்திய தொழில் , வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் .
  • இதற்கு முன்பு தவர் சந்த் கெலாட்  தலைவராக பொறுப்பு வகித்தார் . இவர்  தற்போது கர்நாடகத்தின் ஆளுநகராக நியமிக்கப்பட்டுள்ளார்
விண்வெளி

விகாஷ் என்ஜின் – 3 சோதனை வெற்றியடைந்துள்ளது

  • திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு என்னும் இடத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது .
  • அங்கு ககன்யான் விண்வெளி ராக்கெட்டில் பொருத்தக்கூடிய விகாஷ் என்ஜின் – 3 சோதனை நடைபெற்றது .
  • 240 விநாடிகள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது

இந்திய கடற்படை தனது பத்தாவது பி -8 ஐ கடல் ரோந்து விமானத்தை அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி நிறுவனமான போயிங்கிலிருந்து பெறுகிறது

  • இந்திய கடற்படை தனது 10 வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் கடல் ரோந்து விமானமான பி -8 ஐ போஸிடான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி நிறுவனமான போயிங்கிலிருந்து பெற்றுள்ளது.
  • இந்த விமானம் கடல்சார் உளவுத்துறை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போராக பயன்படுத்தப்படுகிறது.
  • மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆரம்பத்தில் போயிங் நிறுவனத்துடன் எட்டு பி -8 ஐ விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் 2009 ல் இந்திய கடற்படைக்கு கையெழுத்திட்டது. பின்னர் இது 2016 இல் நான்கு கூடுதல் பி -8 ஐ விமானங்களுக்கான மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புத்தகம்

‘கமலா ஹாரிஸ் மற்றும் இந்திய அமெரிக்கர்களின் எழுச்சி’( ‘Kamala Harris and the Rise of Indian Americans’ )என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டது

  • அமெரிக்காவின் துணைத் தலைவராக கமலா ஹாரிஸின் வரலாற்றுத் தேர்தலையும், எழுச்சியையும் ஆவணப்படுத்த, செல்வாக்குமிக்க இந்திய-அமெரிக்கர்கள், அறிஞர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொழில்முனைவோர் குழு ஒன்று சேர்ந்து ‘கமலா ஹாரிஸ் மற்றும் இந்திய அமெரிக்கர்களின் எழுச்சி’ என்ற ஒரு புராணக்கதையை எழுதியது.
  • இந்த தொகுப்பை மூத்த இந்திய ஆசிரியர் தருண் பாசு தொகுத்து திருத்தியுள்ளார்.
விளையாட்டு

ஒலிம்பிக் ஒரு பார்வை

  • ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கை அந்த நட்டு அரசு சர் நருஹிடோ தொடங்கிவைக்கிறார்
  • கொரோனா நோய்த்தொற்று காரணமாக பதக்கத்தை வெற்றியாளர்களே அணிந்துகொள்வார்கள் .
  • உறுதிமொழி ஏற்பு :
  • ஒலிம்பிக் நாட்டை சேர்ந்த 3 பேர் பங்கேற்று நடத்துவர் . ஆனால் இந்த முறை ஜப்பான் விளையாட்டு போட்டியாளர்கள்  வீரர் (2), வீராங்கனைகள் (2). பயிற்சியாளர் (1), நடுவர் (1) என மொத்தம் 6 பேர் பங்கேற்க உள்ளனர் ..
  • உறுதிமொழியில் “சமம், அன்னைவரையும் உள்ளடக்கிய” போன்ற வார்த்தைகள் புதிதாக இடம் பெற்றுள்ளன
  • இந்தியா அணிக்கு அதிகார பூர்வ பாடல் : “சீயர் பார் இந்தியா” (Cheer For India) என்னும்  பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது .
  • இசை – ரகுமான்
  • பாடகி – அனன்யா பிர்லா
  • ராகம் – ஹிந்துஸ்தானி
  • மொழி – ஹிந்தி & ஆங்கிலம்
  • சீனாவை சேர்ந்த 431 போட்டியாளர்கள்
  • சீனாவை சேர்ந்த 431 போட்டியாளர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர் ஏத்தி 14 வயது முதல் 52 வயது வரை உள்ள போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
  • அந்நிய மண்ணில் நடைபெறும் ஒலிம்பிற்கு இத்தனை பேரை சீனா அனுப்புவது இதுவே முதல் முறை ஆகும் .

1896- கிரீஸ் ஒலிம்பிக்ஸ்

  • இந்த ஒலிம்பிக்ஸில் தான் முதல் முறையாக பதக்கங்கள் அறிமுகமாகின .
  • முதலிடம் : வெள்ளி
  • இரண்டாமிடம் : வெண்கலம்
  • மூன்றாமிடம் : பதக்க அறிவிப்பு மட்டுமே

1900- பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

  • முதல் முறையாக பெண்கள் பங்கேற்பு
  • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் – ஹெலன் டி போர்ட்டல்ஸ் (அமெரிக்கா)
  • தனி நபர் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் – சார்லெட் கூப்பர் (இங்கிலாந்து)

1904 – USA ஒலிம்பிக்ஸ்

  • ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே உலகளவில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்ஸ்
  • இதில் தான் முதல் முதலில் தங்க பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது .

1908- லண்டன் ஒலிம்பிக்ஸ்

  • முதல் முறையாக ஒலிம்பிற்க்கான மைதானம் கட்டப்பட்டது .
  • தொடக்க மற்றும் இறுதி நிகழ்ச்சிகள் முதல் முறையாக நடைபெற்றன .தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர் .
  • எந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பின வீரர் – ஜான் டெய்லரே

டி 20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றார்

  • 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் டி 20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் (431 போட்டிகள்) அடித்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி 20 சர்வதேச போட்டியின் போது அவர் இந்த ரன் இலக்கை எட்டினார்.
  • டி 20 கிரிக்கெட்டில் மொத்தம் 22 சதங்களும் 86 அரைசதங்களும் அடித்திருக்கிறார். டி 20 ல் அவரது அதிகபட்ச மதிப்பெண் 175 ஆகும்.
பொருளாதாரம்

மாஸ்டர் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி  தடை விதித்துள்ளது .

  • பரிவர்த்தனை குறித்த தரவுகளை இந்தியாவில் சேமிப்பது குறித்த விதிமுறைகளை மஸ்டர்கார்ட் பின்பற்றாத காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது
முக்கிய தினங்கள்

உலக இளைஞர்கள் திறன் தினம் – ஜூலை 15

  • உலக மேம்பாடு மற்றும் நாளைய உலகத்தின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் தானே இருக்கிறது. இளைஞர்கள் வல்லவர்களாக, திறன் படைத்தவர்களாக இருந்தால் தான் ஒவ்வொரு நாடும், உலகமும் மேன்மை அடைய இயலும்.
  • இந்த அடிப்படையில், சர்வதேச இளைஞர் திறன் தினம் ( World Youth Skill Day ) ஒவ்வொரு வருடமும் ஜூலை 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஐ.நா பொதுசபை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் “சர்வதேச இளைஞர் திறன் நாள்” பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் சர்வதேச இளைஞர் திறன் நாள்” அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
  • 2015 ஆம் ஆண்டில் இருந்து ஜூலை 15 ஆம் நாள் சர்வதேச இளைஞர் திறன் நாள் கொண்டாடப்படுகிறது.
  • இதன் அடிப்படையில் இந்தியா “திறன் இந்தியா” (2015) திட்டத்தை தொடங்கி 6 ஆண்டுகளாக சிறப்பாகி செயல்படுத்தி வருகிறது

கல்வி வளர்ச்சி நாள் – ஜூலை 15

  • கர்மவீரர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை (ஜூலை 15)ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி  நாளாக கொண்டாடப்படுகிறது .
  • 2006 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது .
  • 2021 காமராஜ் அவர்களின்119 வது பிறந்த நாள் ஆகும் .

உலக பாம்பு தினம்- ஜூலை 16

  • ஜூலை 16 உலக பாம்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

Try Today Current Affairs Quiz

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!