சிலிண்டரை ஆன்லைன் மூலமாக புக் செய்கிறீர்களா? – உங்களுக்கான சலுகைகள்!
எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக புக் செய்யும் போது என்னென்ன சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பதற்கான முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்:
இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஏற்றத்திற்கு ஏற்ற வகையில் பொது மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே கேஸ் சிலிண்டர்களை ஆர்டர் செய்து தங்களது தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். நேரடியாகவே சிலிண்டர்கள் வாங்குவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சிலிண்டர் பெற்றுக் கொள்வதில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது ஆன்லைன் மூலமாக சிலிண்டர் புக் செய்யும்போது என்னென்ன நன்மைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது என்பதனை பார்க்கலாம். அதாவது ஆன்லைன் மூலமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது முன்பதிவிற்கென தனியாக எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது. இதனைத் தொடர்ந்து கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று விநியோகஸ்தரை பின்தொடர்வது போன்ற எந்தவித தொந்தரவும் இருக்காது.
இந்தியாவில் உணவு பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ் – வெடிக்கும் சர்ச்சை!
பொதுமக்கள் எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலமாக கேஸ் சிலிண்டரை புக் செய்து கொள்ள முடியும். இதே போல எளிதாக ஆன்லைன் மூலமாகவே சிலிண்டருக்கான பணத்தினை செலுத்தி டெலிவரி கண்காணிப்பினையும் மொபைல் மூலமாகவே தொடரலாம். அடுத்ததாக ஆன்லைன் புக் செய்து சிலிண்டர்களை பெறும் போது கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக வாங்கினால் பல்வேறு சலுகைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது..