டாக்காவில் உள்ள இந்திய கலாச்சார மையத்தில் விடுதலைப் போருக்கான புதிய காட்சியகம் திறப்பு.
மே 30 அன்று வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் கலாச்சார மையத்தில் 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போருக்கான புதிய காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
இது 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கிடையே நடைப்பெற்ற போரில் வெற்றி பெற்று வங்கதேசம் என புதிய நாடு உருவாவதற்கு காரணமாய் அமைந்த இந்தியாவின் பங்கை இது பிரதிபலிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-2023ஆம் ஆண்டுகளில் “பொது அரசின் பற்றாக்குறையானது GDPயில் 9.4% ஆக குறைக்கப்பட்டது – ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் “பொது அரசு பற்றாக்குறை மற்றும் கடன்கள் முறையே 9.4 சதவீதம் மற்றும் 86.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தனது 2022-23 ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பானது 2020-2021ல் முறையே 13.1 சதவீதம் மற்றும் 89.4 சதவீதம் என்ற உச்சநிலையில் இருந்து இந்த மதிப்பிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு மாநாடானது மேகாலயாவில் நடத்த திட்டம்.
இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் ஆசிய சங்கம் இணைந்து ஜூன் முதல் மேகாலயாவில் “இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு உச்சி மாநாட்டை” நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் இணைப்பு முதலீடுகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மேம்படுத்துவதாகும்.
“தானிய சேமிப்பு திறனை” அதிகரிக்க ரூ.1 லட்சம் கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது
கூட்டுறவு துறையில் உள்ள தானிய சேமிப்பு திறனை அதிகரிப்பதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை மற்றும் மாநில அளவில் காலநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதளுக்கும் ஆதரவளிக்க இந்த திட்டமானது அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச செய்திகள்
இலங்கையில் “தேசிய பொசன் வாரம்” தொடக்கம்.
இலங்கையில் பிரசித்தி பெற்ற பொசன் விழாவின், தேசிய பொசன் வாரம் மே 31 அன்று தொடங்குகிறது. இந்த விழாவானது ஜூன் 6 வரை நடைபெறவுள்ளது.
மௌரிய பேரரசரான அசோகரின் மகன் அரஹத் மகிந்த கிமு.236 இல் இலங்கைக்கு புத்த மதத்தை அறிமுகப்படுத்தியதை போற்றுவதற்காக இந்த விழாவானது வெகு பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவானது மிஹிந்தலாய, அனுராதபுரம் மற்றும் தந்திரிமாலயா ஆகிய புனித நகரங்களை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
சிறுகோள் பட்டையை(Asteroid belt) ஆராய்வதற்காக UAE ஆனது தனது 13 ஆண்டு விண்வெளி பயண திட்டத்தை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமானது (UAE) “செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையில் அமைந்துள்ள முக்கிய சிறுகோள் பாதையை ஆராய்வதற்கான ஒரு முன்னோடி விண்வெளி பயணத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
MBR EXPLORER என பெயரிடப்பட்ட இந்த UAEன் லட்சிய திட்டமானது “மார்ச் 2028” இல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின் மர்மங்களை கண்டுப்பிடிக்க மற்றும் சிறுகோள் பாதையில் மறைந்திருக்கக்கூடிய மர்மம் பற்றிய தடயங்களைக் கண்டறிவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாநில செய்திகள்
மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ஆனது வழங்க திட்டம்.
மாநிலத்தில் உள்ள “ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்க”புதிய நிதித் திட்டத்திற்கு மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மே 30 அன்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “நமோ ஷேத்காரி மகாசன்மன் யோஜனா” என்ற இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
‘’Odisha for AI’ & ‘AI for Youth’ என்ற முன்னெடுப்பானது ஒடிஷாவில் அறிமுகம்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ‘Odisha for AI’ & ‘AI for Youth’ என்ற முன்னெடுப்பு முயற்சிகளை மே 30 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்த முன்னெடுப்புக்காக தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல்லுடன் ஒடிஷா அரசாங்கம் இணைந்து செயல்பட ஒப்பந்தமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “புவனேஸ்வர், கட்டா, பூரி ஆகிய சில இடங்களில் இந்த முயற்சியானது செயல்படுத்தப்படும் என ஒடிஷா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர அமைச்சரவையானது “பாலினத்தை உள்ளடக்கிய சுற்றுலாக் கொள்கையை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுலாத் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘அஜாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தின் கீழ் ‘ஆய்’ எனப்படும் பாலினத்தை உள்ளடக்கிய சுற்றுலாக் கொள்கையை செயல்படுத்த மகாராஷ்டிரா அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளையில் மாநிலத்தில் உள்ள சில சுற்றுலாத் தலங்களில் இந்த கொள்கையை முக்கியத்துவப்படுத்துவதற்காக அரசால் “பெண்களுக்கான பைக்-டாக்ஸி சேவைகளை” தொடங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
நியமனங்கள்
பர்மிங்காமின் முதல் இந்திய வம்சாவளி லார்ட் மேயர் நியமிக்கப்பட்டார்.
பிரிட்டன் கவுன்சிலரான “சமன் லால்” பர்மிங்காமின் லார்ட் மேயராக பதவியேற்ற “முதல் பிரிட்டிஷ்-இந்திய சீக்கியர்” என்பது குறிப்பிடத்தகக்கதாகும்.
பஞ்சாபின் ஹோஷியார்பூரில் பிறந்த இவர் 1964 இல் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து அரசியல்வாழ்வில் ஈடுப்பட்டு கவுன்சிலர் ஆனார்.
உலகளாவிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிற்கு இந்தியாவின் பிரதிநிதியாக அங்கசுமாலி நியமனம்.
இந்தியாவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான அங்கசுமலி ரஸ்தோகி, கனடாவின் மாண்ட்ரீயலில் உள்ள “சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கவுன்சிலுக்கு இந்தியாவின் பிரதிநிதியாக மே 30 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, பல்வேறு வெளிநாட்டுப் பணியிடங்களை நிரப்புவதற்கான 12 நியமனங்களுள் இதுவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
RINL நிறுவனத்திற்கு மதிப்புமிக்க “கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023″ வழங்கப்பட்டுள்ளது.
RINLநிறுவனமானது 2022-23 ஆம் ஆண்டிற்கான பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியில் சிறந்த பங்களிப்பு அளித்ததை சிறப்பிக்கும் வகையில் பாதுகாப்புச் சிறப்புப் பிரிவின் கீழ் மதிப்புமிக்க “கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023” ஐப் பெற்றுள்ளது.
இந்த விருதை RINL நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பு இயக்குநர் ஸ்ரீ எ .கே பக்ச்சி, அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான ஸ்ரீ ஜகதீஷ் முகியிடமிருந்து 21ஆவது வருடாந்திர கிரீன்டெக் விருதுகள் வழங்கும் விழாவில் மே 30 அன்று பெற்றுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
Bahnen-Tournee 2023:சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம்.
ஜெர்மனியின் டுடென்ஹோஃபெனில் பகுதியில் நடைப்பெற்ற UCI வகுப்பு 1 நிகழ்வு-இறுதிப் போட்டி “Bahnen-Tournee 2023” சைக்கிள் ஓட்டுதல் போட்டியில், ஆண்கள் பிரிவின் கீழ் இந்திய சைக்கிள் பங்கேற்பாளரான “எஸோவ் ஆல்பன்” வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த சாதனையின் மூலம் “உலக சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்” என்ற பெருமையையும் பெற்றார்.
பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தை வீழ்த்தி புனே பல்கலைக்கழகம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
லக்னோவின் ஏகானா சர்வதேச டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான டென்னிஸ் போட்டியில் “சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகமானது 2-0 என்ற கோல் கணக்கில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
அதேநேரத்தில் “ஜெயின் பல்கலைக்கழகத்தின் பெண் டென்னிஸ் வீராங்கனைகள் 2-0 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை” வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
முக்கிய தினம்
உலக பால் தினம் 2023
பால் மீது கவனம் செலுத்தவும், ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்துக்கொள்ளவும், வாழ்வாதாரம் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதில் “பால் மற்றும் பால் சம்பத்தப்பட்ட பொருள்களின் பங்கு” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக பால் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
“Enjoy Dairy” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.