உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

0
உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு
உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.

70 ஆயிரத்தை நெருங்கும் பலி..!

உலகளவில் இதுவரை 12,74,346 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 69,479 ஆக உள்ளது. மேலும் இதுவரை 2,64,838 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 3,36,830 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 9,618 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,28,948 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 15,887 பேர் உயிர் இழந்துள்ளனர்.

IT கம்பெனிகளில் அநியாயம் – 120 நிமிடங்கள் தான் அவகாசம் அதற்குள் ராஜினாமா செய்யணும்..!

ஸ்பெயினில் 1,31,646 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 12,641 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,708 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,331 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 1,00,123 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 1,584பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவின் நிலைமை:

இந்தியாவில் கொரோனா வைரஸால் 4,298 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 118 பேர் இதுவரை உயிர் இழந்து உள்ளனர். மேலும் 328 பேர் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது.

செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!