தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – சுகாதாரத்துறை அறிக்கை!!

0
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி விநியோகம் - சுகாதாரத்துறை அறிக்கை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி விநியோகம் - சுகாதாரத்துறை அறிக்கை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – சுகாதாரத்துறை அறிக்கை!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட உள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை குறித்த விபரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

தடுப்பூசி விநியோகம்:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதன்படி புனே நகரில் இருந்து சென்னைக்கு 5.36 லட்சம் தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்து சேர்ந்தது. இது தமிழகம் முழுவதும் உள்ள 10 மையங்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 819 பேருக்கு பணிநியமன ஆணை!!

பொதுமக்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை எனவும், அவரவர் விருப்பத்தின் பேரில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

ஏப்ரல் 15க்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு – மாநில கல்வித்துறை திட்டம்!!

ராமநாதபுரம் (8,300), நெல்லை (10,900), கன்னியாகுமரி (22,600), தென்காசி (5,100), தூத்துக்குடி (13,100), வேலூர் (18,600), ராணிப்பேட்டை (4,400), திருப்பத்தூர் (4,700), திருவண்ணாமலை (14,400), சேலம் (27,800), கிருஷ்ணகிரி (11,500), நாமக்கல் (8,700), தர்மபுரி (11,800), கோவை (40,600), ஈரோடு (13,800), திருப்பூர் (13,500), நீலகிரி (5,300) மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி சென்னை (63,700), காஞ்சிபுரம் (10,900), செங்கல்பட்டு (23,800), திருவள்ளூர் (19,600), கடலூர் (7,800), விழுப்புரம் (11,500), கள்ளக்குறிச்சி (6,200), திருச்சி (17,100), அரியலூர் (3,300), பெரம்பலூர் (5,100), புதுக்கோட்டை (6,900), கரூர் (7,800), தஞ்சாவூர் (15,500), நாகப்பட்டினம் (6,400), திருவாரூர் (6,700), மதுரை (23,100), திண்டுக்கல் (13,100), விருதுநகர் (9,700), தேனி (8,200), சிவகங்கை (10,700) தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!