மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!  

0
CLRI Recruitment 2024

Project Assistant, JRF, SRF போன்ற பல்வேறு பணிகளுக்கென மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI)
பணியின் பெயர் Scientific Administrative Assistant, Project Assistant, JRF, SRF, Project Associate – I
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

CLRI காலிப்பணியிடங்கள்:  

CLRI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Scientific Administrative Assistant – 01 பணியிடம்

Project Assistant – 01 பணியிடம்

Project Associate I – 01 பணியிடம்

Junior Research Fellow (JRF) – 01 பணியிடம்

Senior Research Fellow (SRF) – 01 பணியிடம்

CLRI கல்வி தகுதி:

இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, B.Sc, M.Sc, M.Tech முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

CLRI வயது வரம்பு:

Scientific Administrative Assistant பணிக்கு 50 வயது எனவும்,

Project Assistant பணிக்கு 50 வயது எனவும்,

Project Associate I பணிக்கு 35 வயது எனவும்,

Junior Research Fellow (JRF) பணிக்கு 28 வயது எனவும்,

Senior Research Fellow (SRF) பணிக்கு 32 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.

CLRI ஊதியம்:  

Scientific Administrative Assistant பணிக்கு ரூ.18,000/- என்றும்,

Project Assistant பணிக்கு ரூ.20,000/- என்றும்,

Project Associate I பணிக்கு ரூ.25,000/- என்றும்,

Junior Research Fellow (JRF) பணிக்கு ரூ.31,000/- என்றும்,

Senior Research Fellow (SRF) பணிக்கு ரூ.42,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

CLRI தேர்வு முறை:

இந்த CLRI நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 19.01.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

CLRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!