மத்திய அரசின் NCL நிறுவனத்தில் 150 காலியிடங்கள் – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!  

0
மத்திய அரசின் NCL நிறுவனத்தில் 150 காலியிடங்கள் - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!  

Northern Coalfields Limited-ல் (NCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 09.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Foreman பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Northern Coalfields Limited (NCL)
பணியின் பெயர் Assistant Foreman
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NCL காலியிடங்கள்:  

Assistant Foreman பணிக்கென 150 பணியிடங்கள் NCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Assistant Foreman கல்வி:

இந்த NCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு + பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Assistant Foreman வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Assistant Foreman மாத சம்பளம்:

Assistant Foreman பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.47,330/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

NCL தேர்வு செய்யும் விதம்:

இந்த NCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCL விண்ணப்ப கட்டணம்:

SC / ST / ESM / PWBD / Departmental Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.1,180/-

NCL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.01.2024 அன்று முதல் 05.02.2024 அன்று வரை  https://www.nclcil.in/detail/173457/recruitment என்ற இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!