பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை வரும் செப்டம்பர் 20ம் தேதி சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
அடுத்த இலக்கு 2026 தேர்தல் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.. விவரம் உள்ளே!!
நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சந்திப்பில் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க கோரிக்கை விடுப்பார் என கூறப்படுகிறது.


























