திராவிட பாதையில் செல்லும் விஜய்.. சீமானுக்கு சிக்கலா?? முழு விவரம் உள்ளே!!
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். மேலும் அவர் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில் விஜய் திராவிட பாதையில் செல்வதாக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த இலக்கு 2026 தேர்தல் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.. விவரம் உள்ளே!!
அதன்படி, ஆரம்பத்தில் இருந்தே அவரின் அரசியல் பேச்சுகள், திராவிட சித்தாந்தத்தையே எதிரொலித்து வந்திருக்கின்றது . ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு என திமுகவின் சொல்லாடல்களே அவரது பேச்சிலும் இருந்தது. நேற்று (செப்டம்பர் 17) பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சமூக நீதிப் பாதையில் பயணிப்போம் எனவும் கூறியுள்ளார். இதனால், இவர் திராவிட சித்தாந்தத்தின் வழியில் கட்சியை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் இது சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் எனவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்’.


























