புதிய ஊழியர்களுக்கு SURPRISE..! ” வேலை நிறுத்திய பின்னும் நீங்கள் PF பணம் வாங்கலையோ..?? ” அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்”..!!
இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் புதிதாக சேர்ந்த பணியாளர்களுக்காக தொழிலாளர் அமைச்சகமானது சிறப்பான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த சில நாட்களாக பழைய தொழிலாளர்களின் EPFO செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர் அமைச்சகம் கொண்டு வந்த நிலையில் , தற்போது புதிய தொழிலாளர்களின் EPFO செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர் அமைச்சகம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
1. ஒரு வேலையில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்கள், 6 மாத காலத்திற்கு பிறகு சுய காரணத்திற்காக பணியில் இருந்து நீங்கும் பட்சத்தில், அவர்களால், PF தொகையை பெற முடியாது. ஆனால், இந்தக் கட்டுப்பாடு தற்போது திருத்தப்பட்டு, பணியில் சேர்ந்த அடுத்த மாதமே நீங்கள் PF தொகையை திரும்ப பெற வழி செய்கிறது.
பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்?? வெளியான முக்கிய தகவல்!!
2. 1995ம் ஆண்டில் மத்திய அரசானது EPF திட்டத்தில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து, தற்போது 6 மாதங்களுக்கும் குறைவான காலங்களில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு “WITHDRAWAL BENEFITS” என்ற தொகை திரும்ப பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இதில் 7 லட்சத்திற்கும் மேலான EPF ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. EPF தொகையை எடுக்கும் டிஜிட்டல் செயலியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
4.அரசாங்கம் மூலம் ஊழியர்களுக்காக நடத்தப்படும், “FUTURE SAVINGS” அமைப்பான EPFO-வில் தனிப்பட்ட நிதி தேவைகளுக்காக உங்கள் கணக்குகளில் இருந்து ரூ.1 லட்சம் வரை பெற்று கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், இதன் முந்தைய வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது தற்போது 2 மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


























