18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இன்ஸ்டா ஓபன் பண்ண கூடாதா..? சிறார்களுக்கு செக் வைத்த மெட்டா நிறுவனம்..!!
இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, 18 வயதிற்கு கீழ் உள்ள உள்ளவர்கள் அதில் அதிகமாக மூழ்கி உள்ளதால் பள்ளி பருவத்திலேயே சில தவறான பாதையில் சென்று விடுகின்றனர். அதனை தடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வரப்போவதாக மெட்டா நிறுவனம், தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் இன்ஸ்டா அக்கவுண்டில் ” TEEN ACCOUNT ” என்ற புதிய அம்சத்தை கொண்டு வர போவதாகவும், பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் அனுமதி பெறாத அனைத்து சிறார்களின் கணக்குகளும்” PRIVATE-ஆக ” மாற்றம் செய்யப்படும் என்று மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது கூடிய விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது.


























