செங்கல்பட்டு DHS ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…ரூ. 60,000 மாத ஊதியம்…விரைந்து விண்ணப்பிக்கவும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள District Health Society (DHS )ஆனது காலியாக உள்ள Staff Nurse, Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DHS காலிப்பணியிடங்கள்:
DHS வெளியிட்ட அறிவிப்பில் 40 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Medical Officer – 10 பணியிடம்
Staff Nurse – 10 பணியிடம்
Health Inspector (Gr -II) – 10 பணியிடம்
Hospital Worker – 10 பணியிடம்
DHS கல்வி தகுதி:
Medical Officer:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Staff Nurse:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் DGNM / Bsc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Health Inspector Gr -II :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு வருட Multipurpose Health Inspector Course / Health Inspector / Sanitory Inspector துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hospital Worker:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DHS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NIELIT துறையில் ரூ. 1,12,400 மாத ஊதியத்தில் வேலை… விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்…முழு விவரம் இதோ
DHS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Medical Officer – மாதத்திற்கு ரூ. 60,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Staff Nurse – மாதத்திற்கு ரூ. 18,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Health Inspector (Gr -II) – மாதத்திற்கு ரூ. 14,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hospital Worker – மாதத்திற்கு ரூ. 8,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DHS தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
DHS விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chengalpattu.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்படிவம் பெற்று, பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற மார்ச் 24 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைவதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























