
ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் நிறைவு.. அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல்..
இந்தியா முழுவதும் மொத்தம் 19 ரயில்வே மண்டலங்கள் உள்ளது. இதன் மூலம் நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மதுரையில் சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை.. நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு..
அதாவது, “உலக நாடுகளுக்கு இணையாக இந்தியன் ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரயில்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் தலா 10 பெட்டிகள் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டது”. இந்நிலையில் “சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிப்பில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ரயில் தயாரிக்கும் பணிகள் 80% நிறைவு” பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்ணம் தீட்டுதல், பெட்டிகள் இணைத்தல் மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

























