
கும்பகோணம் மற்றும் கன்னியாகுமரிக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்.. மத்திய அரசு அறிவித்த திடீர் அறிவிப்பு..
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக்கூடிய பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இந்த குறியீடு வழங்கப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்கள் வியாபார நோக்கத்தோடு போலியான பெயர்களில் பயன்படுத்துவதை தடுக்க சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும். உதாரணமாக தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை உட்பட பல்வேறு பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பட்டியலில் கூடுதலாக இரு பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ. 2,000 கோடி சொத்து வரி, தொழில் வரி வசூல்…!! சென்னை மாநகராட்சி படைத்த சாதனை…!!
அதாவது, “இன்று (01-04-2025) கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்க பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், முதல் முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாதுமலை புளி மற்றும் கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு பெற பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது”.

























