
கடந்த நிதியாண்டில் ரூ. 2,000 கோடி சொத்து வரி, தொழில் வரி வசூல்…!! சென்னை மாநகராட்சி படைத்த சாதனை…!!
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் வரி போன்றவை பொதுவாக ஆண்டிற்கு இரண்டு முறை வசூல் செய்யப்படுகிறது. அதாவது, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டிற்கும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இரண்டாவது அரையாண்டிற்கும் என ஆண்டிற்கு இரண்டு முறை வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும், இந்த இரண்டாவது அரையாண்டின் இறுதி நாளான நேற்று, வரி பணத்தை செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு, தாமதமாக செலுத்துபவர்களுக்கு 1% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக கடந்த 2024 -2025 ஆம் நிதியாண்டில் 2,750 கோடி ரூபாய் சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2023 -2024 ஆம் நிதியாண்டில் ரூ. 1,733 கோடி வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனுடன் ஒப்பிடுகையில், 2024 -2025 ஆம் நிதியாண்டில் ரூ. 1,017 கோடி அதிகமாக சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூல் செய்து சென்னை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

























