
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி புதிய சாதனை படைத்த Space X…! செவ்வாய்க்கு அனுப்புவதற்கான முன்னோட்டம் எனத் தகவல்…!!
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைக்க அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து ராக்கெட்டுகளை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், குறிப்பாக சந்திரன், சூரியன், செவ்வாய் போன்ற கோள்களை ஆராயும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை சேவை நிறுவனமும் தொடர் முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் அழைத்துச் சென்றதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு…!! இனி ஒரே ஜாலி தான் போங்க…!!
அதாவது, “அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (01-04-2025) காலை இந்திய நேரப்படி 7:16 மணிக்கு Fram 2 ராக்கெட்டை, SpaceX நிறுவனம் விண்வெளிக்கு ஏவியது. மேலும், நான்கு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட இந்த ராக்கெட் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அனுப்பப்பட்ட முதல் விண்வெளி பயணமாகும். இந்த பயணமானது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோட்ட நடவடிக்கை என SpaceX நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























