பி.எப்., பணத்தில் முன்பணம் எடுக்க போறீங்களா? உங்களுக்கான ஹேப்பி நியூஸ் இதோ!
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பி எப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் பி.எப்., அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும், புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. சந்தாதாரர் விண்ணப்பிக்கும் தொகை ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக இருந்தால், ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனே அப்ரூவல் கிடைத்து விடும்.இப்போது இந்த நடைமுறை, மேலும் ‘அப்கிரேட்’ செய்யப்பட்டு, முன் பணம் கூடுதலாகவும், விரைவாகவும் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. பி.எப்., பணத்தில் முன்பணம் பெறுவதற்கான உச்ச வரம்பு 1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.


























