வெளியானது மதுரை எய்ம்ஸ் நிறைவடையும் தேதி.. மத்திய அமைச்சர் அறிவித்த முக்கிய அப்டேட்..
அனைத்திந்திய இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) என்பது இந்தியாவில் உள்ள ஒரு பொது மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் முதன்மை மருத்துவ கழகங்களாக திகழ்கின்றன. மேலும், புது தில்லி, போபால், புவனேஸ்வர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. அந்த வகையில் “மதுரை தோப்பூரில் 220 ஏக்கரில், ரூ.2021 கோடி மதிப்பில் எய்ம்ஸ் வளாகத்தின் கட்டுமானம் மே 22,2024 ஆம் தேதி துவக்கப்பட்டது”.
கடந்த நிதியாண்டில் ரூ. 2,000 கோடி சொத்து வரி, தொழில் வரி வசூல்…!! சென்னை மாநகராட்சி படைத்த சாதனை…!!
மேலும், இரண்டு கட்டங்களாக கட்டுமானம் நிகழ்த்தப்படும் என மத்திய அரசால் முடிவெடுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக கல்வி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 24 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மாநிலங்களவையில் நடந்த கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரிகள் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடமே இல்லாத நிலையில் அட்மிஷன் மட்டும் நடந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியது, நிதி பிரச்சனையால் எய்ம்ஸ் பணிகள் தாமதமானது, தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெறுகின்றன என்றும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்”.



























