தமிழகத்தில் யூனிட்டி மால், ஆய்வு மாளிகைகள் அமைக்கப்படும்…!! தமிழக சட்டசபையில் அமைச்சர் ஏ.வ. வேலு அதிரடி அறிவிப்பு

0
??????????? ???????? ????, ????? ????????? ?????????????...!! ????? ??????????? ???????? ?.?. ???? ?????? ?????????
தமிழகத்தில் யூனிட்டி மால், ஆய்வு மாளிகைகள் அமைக்கப்படும்...!! தமிழக சட்டசபையில் அமைச்சர் ஏ.வ. வேலு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் யூனிட்டி மால், ஆய்வு மாளிகைகள் அமைக்கப்படும்…!! தமிழக சட்டசபையில் அமைச்சர் ஏ.வ. வேலு அதிரடி அறிவிப்பு

 

தமிழக சட்டசபையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது, புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்ல வளாகத்தில் ரூ. 257 கோடி மதிப்பீட்டில் மிக தீவிர நில அதிர்வை தாங்கும் வகையில் புதிதாக தமிழ்நாடு இல்லம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சென்னை எழும்பூரில் கைவினை கலைஞர்கள் உருவாக்கிய பொருட்களை விற்பனை செய்ய “யூனிட்டி மால்” என்ற அரங்கு  ரூ. 227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வெளியானது மதுரை எய்ம்ஸ் நிறைவடையும் தேதி.. மத்திய அமைச்சர் அறிவித்த முக்கிய அப்டேட்..

மேலும், கோவை, பொள்ளாச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஆய்வு மாளிகைகள் ரூ. 9.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில்,  ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பள்ளியறை, நாடக சாலை புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டிற்காக ரூ. 15 கோடி மதிப்பீட்டில் சுற்று சாலை அமைக்கப்படும் என்றும், ரயில்வே கேட்டுகளுக்கு பதிலாக மேல் மற்றும் கீழ் பாலங்கள் ரூ. 787 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!