யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! முழு விவரங்களுடன்!
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிறுது கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கும் யுபிஐ பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு தொகையை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ கணக்குகள் இன்று முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொபைல் எண்களில் இணைக்கப்பட்ட யுபிஐ கணக்குகள் அதிக நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால், அதை இனி பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எப்., பணத்தில் முன்பணம் எடுக்க போறீங்களா? உங்களுக்கான ஹேப்பி நியூஸ் இதோ!
மேலும் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் மற்றும் கனரா வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு ஏற்ப இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் குறைந்தது 25 ஆண்டு அரசுப் பணியில் இருப்பவர்கள் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

























