விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – ரோஷினிக்கு பதிலாக புது நடிகையுடன் விரைவில் தொடக்கம்!

0
விஜய் டிவியில் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 - ரோஷினிக்கு பதிலாக புது நடிகையுடன் விரைவில் தொடக்கம்!
விஜய் டிவியில் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 - ரோஷினிக்கு பதிலாக புது நடிகையுடன் விரைவில் தொடக்கம்!
விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – ரோஷினிக்கு பதிலாக புது நடிகையுடன் விரைவில் தொடக்கம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து, கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி விலக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, வேறு கண்ணம்மாவுடன் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல் வரிசையில் டாப் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில், ஹீரோ பாரதியாக அருண் நடிக்கிறார். ஹீரோயின் கண்ணம்மாவாக ரோஷினி நடிக்கிறார். ரோஷினிக்கு நடிப்பில் இதான் முதல் வாய்ப்பு. அதில் அவருடைய நல்ல நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் இது குறித்து வெளிப்படையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி – ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு!

இந்நிலையில் அவருடைய கடைசி காட்சிகள் சனிக்கிழமையுடன் நடித்து முடித்துள்ளதாகவும், அடுத்து வரும் காட்சிகள் வேறு கண்ணம்மா கதாபாத்திரத்துடன் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலக முக்கியமான காரணம் எதுவும் தெரியவில்லை. அவர் சினிமா வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து விலக இருக்கிறாரா? அல்லது என்ன காரணம் என தெரியவில்லை. இந்த சீரியல் ரசிகர்கள் பலர் கண்ணம்மாவாக தொடர்ந்து விட்டு பின் இரண்டாவது சீசன் போல தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் டிவியில் ஒளிபரப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

ஒரு சிலர் இரண்டாவது சீசன் எல்லாம் வேண்டாம் பாரதி கண்ணம்மா சேருவது போல காட்டி சீரியலை முடித்தால் போதும் ரசிகர்கள் வருத்தப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரோஷினி தான் பொருத்தமாக இருப்பார், அவரை மாற்ற வேண்டாம் என பலர் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் சீரியலில் அடுத்து நடக்க இருக்கும் மாற்றங்கள் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!