SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp சேவைகள் குறித்த அறிவிப்பு!
பாரத ஸ்டேட் வங்கி தற்போது வாட்ஸ்அப் மூலமான வங்கிச் சேவையை துவங்கியிருக்கிறது. எப்படி வாட்ஸ்அப் அக்கௌன்ட்டுடன் வங்கி கணக்கை இணைப்பது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி:
HDFC வங்கி, ஆம் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, IndusInd வங்கி மற்றும் பல வங்கிகளை தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமான வங்கிச் சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது, எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் வங்கியின் கணக்கு இருப்பு தொகை, மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ள முடியும். மேலும், எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எஸ்பிஐ வங்கி வாட்ஸ்அப் மூலமான சேவையை வழங்குகிறது.
வாட்ஸ்அப் மூலமாகவே வங்கி சேவைகளை தொடர முதலில் SBI வங்கி கணக்குடன் வாட்ஸ்அப் கணக்கை இணைக்க வேண்டும். தற்போது எப்படி எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ்அப் மூலமான பேங்கிங் சேவைகளை தொடங்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில், SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208933148 என்கிற எண்ணிற்கு WAREG என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். இந்த குறுஞ்செய்தியை அனுப்பியதும் 90226 90226 என்கிற எண்ணில் இருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு எஸ்பிஐயின் SMS வரும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை செயலர் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
அந்த எண்ணை சேமித்துக்கொள்ளவும். பின்னர், 90226 90226 என்கிற எண்ணிற்கு ‘Hi SBI’ என SMS அனுப்பவும்.Hi என அனுப்பியதும் அன்புள்ள வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கிச் சேவைகளுக்கு வரவேற்கிறோம்! என்கிற செய்தி அனுப்பப்படும். பின்னர், 1. கணக்கு இருப்பு 2. சிறு அறிக்கை 3. வாட்ஸ்அப் வங்கியில் இருந்து பதிவு நீக்கம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து விருப்பத்தை அறிந்துகொள்ளலாம். அதே போல SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணில் இருந்து 08080945040 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் வாட்ஸ்அப் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்கலாம்.