ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.. இனி இந்த கவலையே உங்களுக்கு இல்ல – இதை மட்டும் செய்யுங்க!

0
ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.. இனி இந்த கவலையே உங்களுக்கு இல்ல - இதை மட்டும் செய்யுங்க!
ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.. இனி இந்த கவலையே உங்களுக்கு இல்ல - இதை மட்டும் செய்யுங்க!
ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.. இனி இந்த கவலையே உங்களுக்கு இல்ல – இதை மட்டும் செய்யுங்க!

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. மேலும் ரேஷன் கார்டு இருப்பிட சான்றாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது? என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டை வழங்கியுள்ளது. இந்த கார்டை கொண்டு மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும். மேலும் அரசின் மானியம், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளையும் பெற ரேஷன் கார்டு அவசியமாகும். ஆரம்பத்தில் இந்த ரேஷன் கார்டை பெற நாம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து பெற வேண்டி இருந்தது.

தற்போது எங்கும் அலைய தேவையில்லை, நாம் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வசதியை உணவு வழங்கல் துறை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் பயப்பட வேண்டாம். அதை உடனடியாக ஆன்லைன் மூலமாக திரும்ப பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இணைய வசதி இல்லாதவர்கள் நேரடியாக மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து பெறலாம்.

TNUSRB, TET, TNPSC, SBI 2022 தேர்வுக்கு தயாராவோருக்கு? (செப். 14) Free Mock Test Available!! Register Now!!

Exams Daily Mobile App Download

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் முறை:

  • https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பயனர் நுழைவு என்பதனை கிளிக் செய்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு captcha குறியீட்டை பதிவிட வேண்டும். பிறகு மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ பிரிண்ட் என்பதை கிளிக் செய்து அதில் உங்களின் மொழியை தேர்வு செய்து SAVE கொடுக்கவும்.
  • பிறகு உங்களின் ரேஷன் கார்டு பிடிஎப் வடிவில் கிடைக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • மேற்சொன்ன விவரங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 118004255901 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!