நீட் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!

0
நீட் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!
நீட் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!
நீட் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு நடத்தப்படும் நீட் தேர்வு குறித்து தேதி உள்ளிட்ட அறிவிப்பினை விரைவில் வெளியிட வேண்டும் என மாணவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீட் தேர்வு 2021:

ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில் நீட் தேர்வு குறித்து அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விரைவில் வெளியிடுமாறு மாணவர்கள் ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு சார்பில் இயங்கும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜேஇஇ மெயின் 2021 குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.

பம்ப் ஆப்ரேட்டர்களுக்கான காலமுறை ஊதியம் – மாநாட்டில் தீர்மானம்!!

அதனை தொடர்ந்து மத்திய கல்வி நிறுவனங்களில் பயில ஜேஇஇ அட்வான்ஸ் 2021 தேர்வு குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். ஆனால் மருத்துவ படிப்புகளுக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2021 குறித்த அறிவிப்பினை இன்னும் வெளியிடாததால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

ஜனவரி 14 முதல் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இதுகுறித்து ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பின் போதே மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின் போதாவது நீட் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், நீட் 2021 அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

பூங்காக்கள், கடற்கரைகளில் ஜனவரி 17 வரை பொதுமக்கள் கூட தடை – தமிழக அரசு உத்தரவு!!

எனவே மத்திய கல்வித்துறை அமைச்சர் நீட் தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுவது போல் நீட் தேர்வுகளையும் நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!