ஜனவரி 14 முதல் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஜனவரி 14 முதல் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜனவரி 14 முதல் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜனவரி 14 முதல் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடகாவில் உள்ள கல்லூரிகள் ஜனவரி 14 முதல் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் டாக்டர் சி என் அஸ்வத் நாராயண் அறிவித்து உள்ளார்.

கல்லூரிகள் திறப்பு:

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மாநிலத்தில் உள்ள கல்லூரிகளை மீண்டும் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஜனவரி 14 முதல் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் வழக்கமான வகுப்புகளை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்??

கர்நாடகாவில் உள்ள கல்லூரிகள் கிட்டத்தட்ட 10 மாதங்கள் மூடப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்றும், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு மீண்டும் தொடங்கப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சராக இருக்கும் துணை முதல்வர் டாக்டர் சி என் அஸ்வத் நாராயண் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டை 2 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் – ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கான வகுப்புகள் கடந்த வருடம் மார்ச் மாதம் நிறுத்தப்பட்டன. மார்ச் முதல், கல்லூரிகளில் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு:

6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் ஜனவரி 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. கர்நாடக பி.யூ.சி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் 2021 தேதிகளையும் மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுகளின் தேதிகளை கர்நாடக முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!

கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி 2021 தேர்வுகள் ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும், கர்நாடக பி.யூ.சி 2021 தேர்வுகள் இந்த ஆண்டு மே மாதத்தில் நடத்தப்படும். அதற்கான பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!