தமிழக மக்களுக்கு அலர்ட்.. தேவையின்றி வெளியே வர தடை – காவல்துறை அறிவுறுத்தல்!

0
தமிழக மக்களுக்கு அலர்ட்.. தேவையின்றி வெளியே வர தடை - காவல்துறை அறிவுறுத்தல்!
தமிழக மக்களுக்கு அலர்ட்.. தேவையின்றி வெளியே வர தடை - காவல்துறை அறிவுறுத்தல்!
தமிழக மக்களுக்கு அலர்ட்.. தேவையின்றி வெளியே வர தடை – காவல்துறை அறிவுறுத்தல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதில் வங்க கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இ-காமர்ஸ் தளங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – அரசு வெளியீடு!

இதனால் மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் சென்னையில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடல் அலை அதிகரிப்பு காரணமாக யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!