போக்குவரத்து நெரிசலை தவிர்க்க Google உடன் ஒப்பந்தம் – அதிரடி அறிவிப்பு!

0
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க Google உடன் ஒப்பந்தம் - அதிரடி அறிவிப்பு!
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க Google உடன் ஒப்பந்தம் - அதிரடி அறிவிப்பு!

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க Google உடன் ஒப்பந்தம் – அதிரடி அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை கையாளுவது மிகுந்த சிரமமாக இருக்கிறது. இது குறித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்ததை பற்றி பார்க்கலாம்

பெங்களூர் போக்குவரத்து:

மிக பெரிய நகரங்களின் ஒன்றான பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள் தொகையில் ஐந்தாவது இடத்திலும் இந்த நகரம் இருக்கிறது. அங்கே வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் தொகை ஒரு கோடியை கடந்துவிட்டது. இங்கே கன்னடம், தமிழ், தெலுங்கு பேசும் மக்கள் வசித்து வருகின்றனர்.மக்கள் தொகை அதிகரிப்பால் சாலைகளில் வாகனங்களும் பெருகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதனால் போக்குவரத்தை கையாளுவது பெங்களூரு போலீசிற்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. அதனால் போக்குவரத்தை சரியாக கவனிக்க பெரும்பாலான போக்குவரத்து சிக்னல்கள் விரைவில் மேம்படுத்தப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் போக்குவரத்து நிர்வாகத்தை எளிதாக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் ஒரு புதிய ஒத்துழைப்பைக் கொண்டு வந்துள்ளனர்.

10,12 படித்தவருக்கு தமிழக NLC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இது குறித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறுகையில், கூகுளுடன் நேரடியாக கைகோர்ப்பது போலீஸ் துறைக்கு இதுவே முதல் முறை ஆகும். நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், போக்குவரத்தை எளிதாக நிர்வகிப்பதற்கும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். இது மில்லியன் கணக்கான பயணிகளை அவர்களின் அன்றாட வாழ்க்கையில், சிறந்த முறையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் பயன் சேர்க்கும். ட்ராஃபிக் விளக்குகளின் உள்ளமைவை மேம்படுத்த, Google உடன் ஒரு முன்னோடித் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!