மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் தினேஷ் – அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?
சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் வெள்ளித்திரையை நோக்கி படை எடுத்து வரும் நிலையில், நடிகர் தினேஷ் மீண்டும் விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
நடிகர் தினேஷ்:
சின்னத்திரையில் உள்ள நடிகர், நடிகைகள் தற்போதைய சூழலில் திரைத்துறையினரை போல அதிக ரசிகர்களை கொண்டுள்ளனர். இவர்களின் சமூக வலைப்பக்கங்களில் உள்ள பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையே இதற்கு உதாரணம். மேலும், சின்னத்திரையில் இருப்பவர்கள் சினிமாவை நோக்கி படை எடுத்து மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றனர்.
இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பாக விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகர் தினேஷ். தனித்துவமான இவரது நடிப்பால் முதல் தொடரிலேயே அதிக ரசிகர்களை பெற்றார். அதன் பிறகு வரிசையாக விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக சில வருடங்களுக்கு முன்னதாக ஜீ தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்தார். இது மெகா வெற்றி பெற்ற தொடராக அமைந்தது.
ராமமூர்த்தி வேற லெவல் தான்.. போலீஸின் துணையோடு கோபியின் திருமணத்தை நிறுத்த மாஸ்டர் பிளான்!
Exams Daily Mobile App Download
மேலும், ஒரு சில சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது தினேஷ் விஜய் டிவியின் ஒரு பிரபலமான சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஈரமான ரோஜாவே சீரியலில் தினேஷ் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஆனால், தொடர்ந்து நடிப்பாரா அல்லது சில நாட்கள் மட்டும் நடிப்பாரா என்பது போன்ற விவரங்கள் இனி தான் தெரிய வரும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்