ராமமூர்த்தி வேற லெவல் தான்.. போலீஸின் துணையோடு கோபியின் திருமணத்தை நிறுத்த மாஸ்டர் பிளான்!

0
ராமமூர்த்தி வேற லெவல் தான்.. போலீஸின் துணையோடு கோபியின் திருமணத்தை நிறுத்த மாஸ்டர் பிளான்!
ராமமூர்த்தி வேற லெவல் தான்.. போலீஸின் துணையோடு கோபியின் திருமணத்தை நிறுத்த மாஸ்டர் பிளான்!
ராமமூர்த்தி வேற லெவல் தான்.. போலீஸின் துணையோடு கோபியின் திருமணத்தை நிறுத்த மாஸ்டர் பிளான்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் திருமண வாழ்க்கை முடிந்துள்ள நிலையில் கோபி ராதிகா திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்த நினைத்து ராமமூர்த்தி போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கிறார். இது குறித்து அடுத்த எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், தன்மானம் தான் முக்கியம் என நினைத்து பாக்கியா, கோபிக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கோபி தன்னுடைய நீண்ட நாள் ஆசை காதலியான ராதிகாவை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். ஆனால் ராதிகா முதலில் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் அம்மாவும், சந்துருவும் சொல்வதை கேட்டு ராதிகா மனம் மாற, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

இதற்கிடையே பாக்கியா செய்தது பிடிக்காமல் ஈஸ்வரியும், செழியனும், இனியாவும் பாக்கியாவை கஷ்டப்படுத்த, அதை எல்லாம் பொறுப்படுத்தாமல் இந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நல்ல தொழில் செய்ய வேண்டும் என நினைத்து பெரிய சமையல் காண்ட்ராக்ட் ஒன்றை வாங்குகிறார் பாக்கியா. முதல் ஆர்டர் தன்னுடைய கணவரின் கல்யாணம் என தெரியாமல் எல்லா வேலைகளையும் திட்டமிட்டு செய்கிறார். கோபியின் திருமணம் பற்றி தெரிந்து கொண்ட ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த வாக்கு கொடுக்கும் ராமமூர்த்தி – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ ரிலீஸ்!

Exams Daily Mobile App Download

அதனால் ராமமூர்த்தி கோபியை சந்தித்து பேச ஆனால் கோபி தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். அதனால் ராமமூர்த்தி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கியதாக சொல்லி போலீசிடம் புகார் கொடுக்கிறார். போலீஸ் புகாரை ஏற்று ராதிகாவை ஸ்டேஷன் வர சொல்ல அங்கே பாக்கியாவும் வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அப்போது தான் பாக்கியாவிற்கு திருமணம் பற்றி தெரிய வர, எனக்கும் கோபி உடன் வாழ விருப்பம் இல்லை என பாக்கியா கண்ணீருடன் விட்டு கொடுக்கிறார். பாக்கியா பேசியதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here