தமிழகத்தில் ஆவின் குடிநீர் தயாரிப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆவின் மூலமாக குடிநீர் தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவின் தண்ணீர்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலம் தினமும் பொதுமக்களுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் மூலம் பால் மட்டுமல்லாமல் வெண்ணெய், நெய், பால்கோவா, தயிர், லஸ்ஸி, மோர், ஐஸ்க்ரீம் போன்ற 225 வகையான பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் தீபாவளி போனஸ் வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இரவும், பகலுமாய் தீவிரம் காட்டும் கனமழை – 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
அதில், தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் 4070 பணியாளர்களுக்கு நிகழாண்டு தீபாவளி போனஸாக ரூ. 5.96 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் இருந்த பல குறைபாடுகள் சரி செய்யப்பட்டு நிலையான வளர்ச்சியை ஆவின் எட்டியுள்ளது. தற்போது ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை அதிகரிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால் தற்போதைக்கு ஆவின் குடிநீர் தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.