ஆவின் மூத்த தொழிற்சாலை உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு – உயர்நீதிமன்றம் ஆணை!!

0
ஆவின் மூத்த தொழிற்சாலை உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு - உயர்நீதிமன்றம் ஆணை!!
ஆவின் மூத்த தொழிற்சாலை உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு - உயர்நீதிமன்றம் ஆணை!!
ஆவின் மூத்த தொழிற்சாலை உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு – உயர்நீதிமன்றம் ஆணை!!

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த தேர்வுக்கான விடை குறிப்புகளை வெளியிடுமாறு தேர்வு ஆணையத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தற்போது அந்த தேர்வுக்கான விடை குறிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பித்து தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 30 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட்டன. அதற்கான அதிகபட்ச கல்வித்தகுதி 12-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு 25% கூடுதலாக வழங்க மாற்றுத்திறனாளிகள் மனு – தமிழக அரசு விளக்கம்!!

இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள் – பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு!!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆவின் நிறுவனத்தில் மதுரைக் கிளையில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வில் முதற்கட்டமாக விடை குறிப்பு (ஆன்சர் கீ) வெளியிடவும் பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!