பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள் – பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு!!

0
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள் - பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு!!
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள் - பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு!!
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள் – பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு!!

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு தேவையான எந்த சலுகைகளும் வழங்காததால் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ட்விட்டர் மூலமாக மனு அனுப்பி வருகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர்கள்:

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக 2012-ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளிலும் தையல், யோகா, இசை, ஓவியம் போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான பகுதி நேர ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான புதிய வழிமுறைகள் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

அவர்களுக்கு ஊதியமாக ரூ.7,700 வழங்கப்படுகிறது. 8 வருடங்களாக ஒரே ஊதியம் வழங்குவதால் ஊதியத்தை உயர்த்தி தருமாறும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பலர் கோரிக்கை விடுத்தனர்.

கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் – எம்டிசி அறிவிப்பு!!

தற்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு பணிக்கான ஊதியம், பி.எப், இ.எஸ்.ஐ, மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ காப்பீடு என ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தற்போது ட்விட்டர் வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மனு அளித்து வருகின்றனர். தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!