கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் – எம்டிசி அறிவிப்பு!!

0
கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் - எம்டிசி அறிவிப்பு!!
கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் - எம்டிசி அறிவிப்பு!!
கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் – எம்டிசி அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பல தளர்வுகளுக்கு பின் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்யும் மாணவர்களுக்கான புதிய பயண அட்டை வழங்க காலதாமதம் ஏற்படும். எனவே மாணவர்களை கடந்த ஆண்டு பயண அட்டையை கொண்டே பயணம் செய்யலாம் என எம்டிசி தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான பயண அட்டை:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் முதற்கட்டமாக கல்லூரிகளை கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. முதலில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திருப்பினாலும் மாணவர்கள் பயணம் செய்ய இலவச பயண அட்டை புதுப்பிக்காமல் உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் மாணவர்களுக்கான புதிய அறிவிப்பினை எம்டிசி வெளியிட்டுள்ளது, இதன்படி கல்லூரிகள் 9 மாதங்களாக மூடப்பட்ட நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. எனவே புதிய இலவச பயணச்சீட்டு அச்சடித்து, லேமினேஷன் செய்ய நேரம் அதிகம் செலவாகும் எனவே மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தங்களுடைய கல்லூரி அடையாள அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம், அரசு கல்லூரி மற்றும் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு 2019-2020 கான அட்டையை பயன்படுத்தி ஜனவரி 31 வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஏ.பி.எல் சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களுக்கு தடை – FSSAI அறிவிப்பு!!

இந்த உத்தரவு குறித்து கிளை மேலாளர்கள், பணிமனை நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெளிவாக அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் கல்லூரிகளுக்கு இலவசமாக பயணம் செய்ய இந்த திட்டம் வழிவகை செய்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!