பொங்கல் பரிசு 25% கூடுதலாக வழங்க மாற்றுத்திறனாளிகள் மனு – தமிழக அரசு விளக்கம்!!

0
பொங்கல் பரிசு 25% கூடுதலாக வழங்க மாற்றுத்திறனாளிகள் மனு - தமிழக அரசு விளக்கம்!!
பொங்கல் பரிசு 25% கூடுதலாக வழங்க மாற்றுத்திறனாளிகள் மனு - தமிழக அரசு விளக்கம்!!
பொங்கல் பரிசு 25% கூடுதலாக வழங்க மாற்றுத்திறனாளிகள் மனு – தமிழக அரசு விளக்கம்!!

ஜனவரி மாதம் 15-ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் பரிசு தொகையில் 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் பொங்கல் பரிசு வழங்க முடியாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் வருடந்தோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அதன்படி கடந்த வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக மக்களுக்கு 2500 ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் கடந்த 21-ஆம் தேதி அறிவித்தார்.

பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள் – பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு!!

2016-ஆம் வருடம் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின் கீழ், பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25% அதிகம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு தமிழக அரசு பொங்கல் பரிசு, ஒரு திட்டம் இல்லை என்று கூறி வழக்கை நிராகரித்து விட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான புதிய வழிமுறைகள் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

அதற்கு எதிர்தரப்பில் திட்டம் இல்லாமல் உதவி தொகை வழங்க முடியது எனவே உதவித்தொகை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனு அளித்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.மஹாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் வழங்கும் பொங்கல் பரிசு மொத்த குடும்பத்திற்கும் வழங்கப்படுவது தவிர தனி நபருக்கு அல்ல, எனவே மாற்றுத்திறனாளிகளின் இந்த சட்டம் இதற்கு பொருந்தாது என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை வருகிற ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!