புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்…அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய தகவல்

0
????? ????? ???????? ???????? ????????????...???????? ????????? ????????? ??????? ?????
புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்...அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய தகவல்

புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்…அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய தகவல்

 

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில், குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் மாதந்தோறும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக திருமணம் ஆனவர்கள் இந்த சலுகைகளை பெறுவதற்கு, தற்போது ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி காலதாமதமாக பந்து வீசினால் அபராதம் விதிக்கப்படாது.. BCCI வெளியிட்ட புதிய விதிமுறை மாற்றம்..

அதாவது, “தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 18.9 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும், தற்போது “புதிய ரேஷன் அட்டைக்கு பதிவு செய்த 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு ரேஷன் அட்டைகள்  வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் 2 கோடியே 29 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, “அனைத்து நியாய விலை கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!