திருச்சியில் 7 தளங்களுடன் அமையவுள்ள கலைஞர் நூலகம்.. தமிழக முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்..
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபையில் அறிவித்திருந்தார். அந்த வகையில் திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரவையில் 4.57 ஏக்கரில் 7 தளங்களுடன் கலைஞர் நூலகம் அறிவுசார் மையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நூலகம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்…அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய தகவல்
அதாவது, “திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இன்று (21-03-2025) அடிக்கல் நாட்டினார். மேலும், இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் விரிவுபடுத்தப்பட்ட 1,000 ஒருகால பூஜைத் திட்ட கோவில்களுக்கு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களிடம் வழங்கினார்”.



























