TNPSC தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
TNPSC தேர்வு ஆணையம் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு:
தமிழ்நாடு பொது துணை பணியில் ஜவுளி துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வுகள் 05.10.2023 & 06.10.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூபாய் 35,400 முதல் ரூபாய் 1,30,400 வரை சம்பளமாக பெறுவார்கள். கணினி அடிப்படையில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் முடிவுகள் நவம்பர் 28 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TNPSC தேர்வில் பாஸ் ஆக என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராக வேண்டும்? – உடனே பாருங்க!
அதாவது தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி துணை பணி மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் உதவி பயிற்சி அலுவலர் பணிகளுக்கு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவின்போது சமர்ப்பித்த ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இது குறித்த மேலும் அதிக விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.