6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!

1
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பியூசி வகுப்புகள் தொடக்கம்!!
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பியூசி வகுப்புகள் தொடக்கம்!!
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கொரோனா பொது முடக்கம்:

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கடந்த ஆண்டு இறுதித்தேர்வு கூட எழுத முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில் பொது முடக்கம் இந்த கல்வியாண்டிலும் நீடித்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் பாடங்கள் நடத்தப்பட்டன. நோய் பரவல் தாக்கம் சிறிது குறைந்துள்ளதால் கடந்த இரு மாதங்களாக ஒரு சில மாநிலங்களில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கேரளாவில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு:

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மீண்டும் திறப்பதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டது. எனவே மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் பயிலும் 10வது மற்றும் பியூசி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில், 6 முதல் 9 வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வெளிப்புற வகுப்புகள் நடத்தப்பட்டன.

கட்டுப்பாடுகள்:

பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் தனி மனித இடைவெளி கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். உடல் வெப்ப நிலை அனைவருக்கும் பரிசோதிக்கப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டது.

பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மலர் தூவி வரவேற்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் வருகை குறைந்த அளவில் தான் இருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

பள்ளிகள் மற்றும் பியூசி கல்லூரிகள் திறப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மாநில முதல்வர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் செயல்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தனது உரையில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆய்வு:

இந்நிலையில் அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் உரையாற்றினார். மேலும் பிரிட்டனில் இருந்து வரும் புதிய கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

 1. இன்றைய இந்திய கல்விமுறை படைப்பாற்றல் திறன் அற்றது. இந்த கொரோன இடைவெளி இறைவனால் கல்வி மாற்றதினை உருவாக்குவதற்காக கால இடைவெளி அகும். பழைய கல்வி முறையினை மறக்கவும்,புதிய கல்விமுறையை கட்டமைத்து உருவாக்க தேவையான
  மனமற்றதினை ஏற்படுத்த தேவைப்படும் கால இடைவெளி அகும்.

  மொழி
  மொழி என்பது ஒரு கருவியாகும். ஒரு பொருளும் மற்றொரு பொருளும் தொடர்பு கொண்டு தனது தேவையினை பூர்த்தி செய்ய பயன்படுவதே மொழியாகும்.

  ஒருவர் தனது தாய்மொழியினை முழுமையாக அதாவது அகரவரிசை (Alphabets) எழுத்துக்களுக்கான பொருளுடன் தெளிவாக கற்றுக் கொண்டுவிட்டால். உலக மொழிகள் அனைத்தையும் எளிமையாக கற்று விடலாம். காரணம் உலக மொழிகளின் அகரவரிசை எழுத்துக்களின் வடிவம் மற்றும் உச்சரிப்பு மட்டுமே வேறுபடும் ஆனால் அகரவரிசை(Alphabets ) எழுத்துக்களுக்கான பொருள் ஒன்றே ஆகும். இதனைத்தான் 14 மொழிகள் கற்றறிந்த பாரதி செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனையில் ஒன்றுடையாள் என்ற கருத்தினை முன் வைத்தார்.

  இன்று உலக அளவில் பயன்பாட்டில் உள்ள மொழிகள் அனைத்துமே தனது அகரவரிசை ( Alphabets ) எழுத்துக்களுக்கான பொருள் அதாவது எழுத்திற்க்கான உருவம் (மெய்)உண்டு, பொருள்( உயிர் ) இல்லை. இதுவே இன்றைய மொழி பிரச்சினை, மொழி பகிஷ்கரிப்பு ,மொழி விற்பனை,உயர்ந்த மொழி, தாழ்ந்த மொழி போன்ற எண்ணற்ற கருத்து திணிப்பு செயல்களுக்கான அடிப்படை காரணம் ஆகும்.

  என்று நமது கல்வி முறை அகரவரிசை(Alphabets ) எழுத்துக்களுக்கான பொருளுடன் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாட்டிற்கு முன்வருகின்றனவே அன்றே மொழி குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

  உலகம் அமைதி பெரும், அரசியல், பொருளாதரம்,சமூகம்,சமயம், கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவற்றிற்க்கு வழிவகை செய்து அனைத்துமே நீடித்த நிலைத்த மேம்பாட்டினை அடையும்.

  மேற்கண்ட கருத்துக்களை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்புடைய ஆய்வு அறிக்கை என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் புதிய கல்வி கொள்கையின் மூலம் வெளிவரும்.
  ஒரு மொழியின்அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை கற்றுக் கெடுக்காமல் மொழியின் இலக்கண வளம், இலக்கிய வளம் இருந்து என்ன பயன்?
  * உயிர் எழுத்துக்கள் : அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ
  * மெய் எழுத்துகள் :
  க்,ங், ச், ஞ், ட்,ண், த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ், ள், ற்,ன்
  * ஆயுத எழுத்து :

  # இது வரைக்கும் தமிழ் மொழியினை ஒன்றாம் வகுப்பு முதல் முனைவர் கல்வி வரை கற்று இருப்பீர்கள் எங்காவது தமிழ் மொழியின் அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை அறிந்து இருக்கிறீர்களா?

  #அப்படியானால் ஏன் இது நாள் வரையில் அது பற்றி எங்குமே கேள்வி கூட பட்டதில்லை ஏன்?

  # தமிழ் மொழியின் அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை மறைப்பதில் யாருக்கு என்ன லாபம்?

  ;# தமிழ் மொழியின் அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை பற்றி கற்றுக் கெடுக்காமல் அந்த மொழியியல் படைப்பாற்றல் கல்வியினை இவ்வாறு உருவாகும்?

  இத்தகைய கல்வி முறை வானவில்லின் ஒவ்வொரு வர்ணங்களை பற்றி கூறாமல் வானவில்லினை பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒப்பான தவறான கல்வி முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!