2024 ல் இலவச கல்விக்கான RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கை இல்லை? – தனியார் பள்ளிகள் தகவல்!

0
2024 ல் இலவச கல்விக்கான RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கை இல்லை? - தனியார் பள்ளிகள் தகவல்!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் நடத்தப் போவதில்லை என்று அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை:

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் உத்தரவின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயில்வதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி தனியார் பள்ளிகளின் ஆரம்ப நிலை வகுப்புகளில் உள்ள 25 சதவீத இடங்களில் ஆர் டி இ திட்டத்தின் மூலம் மாணவர்கள் குலுக்கல்  முறையில் தேர்வு செய்யப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். இதன் மூலமாக ஏழ்மை நிலையில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பலரும் தரமான கல்வியை படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அந்தந்த அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு செலுத்தும்.

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.1487 கோடி நிவாரணத்தொகை – தமிழக அரசு அறிக்கை!

இந்நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆர்டிஈ திட்டத்தில் சேர்ந்த குழந்தைகளுக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணம் 360 கோடி ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளி சங்கம் புகார்கள் அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் தங்கள் சங்கத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப் போவதில்லை என்றும், தங்கள் கோரிக்கைக்காக தங்கள் பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகிகளும் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!