மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.1487 கோடி நிவாரணத்தொகை – தமிழக அரசு அறிக்கை!

0
மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.1487 கோடி நிவாரணத்தொகை - தமிழக அரசு அறிக்கை!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை குறித்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ளது.

நிவாரணத் தொகை:

வடகிழக்கு பருவமழை கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதி முதல் துவங்கி ஜனவரி மாதம் வரையிலும் நீடித்து வந்தது. குறிப்பாக வழக்கத்தை விட கடந்த முறை அதிக மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் டிசம்பர் மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகினர்.

DRDO ஆணையத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை தமிழக அரசு ரேஷன் அட்டைகள் வாயிலாக வழங்கியது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் நிவாரண தொகை வழங்கியது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆனது தமிழக அரசு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசு இன்று சமர்பித்த அறிக்கையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 1487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!