ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் உயரும் – கல்வி நிபுணர்கள் கருத்து!!
2021 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேஇஇ தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்:
மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி.,ல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க தேசிய தேர்வு முகமை மூலமாக ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 மாதங்களில் நடத்தப்படுகின்றன. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தேர்வுகள் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டு 26 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டன. இந்த தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு 69% இடஒதுக்கீடு வழக்கு – மார்ச் 5 ஆம் தேதி விசாரணை!!
இது குறித்து கல்வி நிறுவன தலைவர்கள் கூறுகையில், “கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜேஇஇ அதிகமாக இருக்கும் இருப்பினும் ஏப்ரல், மே மாதம் நடத்தப்படும் தேர்வுகள் பொறுத்து உண்மையான கட்-ஆஃப் மதிப்பெண் இருக்கும். மேலும் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 90 முதல் 100 விழுக்காடு வரை இருக்கும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் “ஆல் பாஸ்” முறை – ஆசிரியர்கள் கருத்து!!
இந்த ஆண்டு தேர்வுகளில் சில வினாக்கள் பழைய சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. வினாத்தாள்கள் கடினமானதாக இருந்ததால் கட்-ஆப் மதிப்பிலும் பாதிப்பு ஏற்படும்”, இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்