2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – சென்னை ஐஐடி முதலிடம்!!

0
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்!!
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்!!
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – சென்னை ஐஐடி முதலிடம்!!

அமெரிக்காவில் உள்ள உலக பல்கலைக்கழகம் சார்பில் 2021 ஆம் ஆண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி இந்திய கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்:

உலக பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் தயார் செய்து வெளியிடும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது.

TN Job “FB  Group” Join Now

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் இந்திய அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 14 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தது. இந்திய கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் சென்னை ஐஐடி 30-வது இடத்தை பெற்றுள்ளது. அதே போல மும்பை ஐஐடி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் 41 ஆம் இடம், ஐஐடி கோரக்பூர் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

சிபிஎஸ்சி பள்ளிகள் இறுதித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!!

இது சர்வதேச அளவில் 44 வது இடம், அதே போல டெல்லி பல்கலைக்கழகம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் 50வது இடம் ஆகும். டெல்லி ஐஐடி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. சென்னை ஐஐடி முதல் இடத்தை பெற்றதற்கு காரணம் பெட்ரோலிய பொறியியல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதே காரணம்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!

இது குறித்து மூத்த துணை தலைவர் பென் ஸ்வாட்டர் கூறுகையில்,”மத்திய அரசு தெரிவித்த புதிய கல்வி கொள்கை விளைவு சில மாதங்களில் தெரிய வரும். தற்போது இந்திய கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை கல்வி மற்றும் பாடத்திட்டத்தை தரத்தில் சமரசம் செய்யவில்லை. ஆனால் இந்த ஆண்டு தரவரிசை பாடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு 235 பாடங்கள் உள்ளன.

2021 ஜேஇஇ (மெயின்) தேர்வு மையங்கள் அதிகரிப்பு – தேசிய தேர்வு மையம் அறிவிப்பு!!

அதே சமயம் 2021 ஆம் ஆண்டு 233 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது இந்திய கல்வி முறையின் முன்னேற்றத்தை காட்டுகிறது. மத்திய அரசின் குறிக்கோளான உயர்கல்வியை 50 சதவிகிதத்திற்கு உயர்த்துவது 2035 ஆம் ஆண்டு கட்டாயம் நிறைவேற்றப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!