தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை அளிக்குமாறு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் கழகம் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும், கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்ததாலும் பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதாலும், கடந்த ஜனவரி 19ம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
சிபிஎஸ்சி பள்ளிகள் இறுதித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!!
பொதுத்தேர்வுகள் ரத்து:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி அன்று நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 9, 10 மற்றும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை பற்றிய அறிவிப்பை மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் 9,10,11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
ஆசிரியர் கோரிக்கை:
சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் கழகம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கோரிக்கை அளித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
ஐந்து நாள் சம்பளம் மட்டும் போதுமா
உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இது போன்றதொரு கோரிக்கை வைப்பீர்களா?
365 days leave vittalum paravaellai engalukku pay kodu ena ketpavarkal teachers .
ennamo pannunga
Nalla varuthu vaayila neenga vangura sambalathukku sunday um ungalukku work vaikanum