நடப்பு நிகழ்வுகள் – 10 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 10 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 10 செப்டம்பர் 2023

நடப்பு நிகழ்வுகள் – 10 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

டாடா ஏஐஏ குழுமமானது உலகளவில் 5வது இடத்தையும், இந்தியாவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. – MDRT Advisors அறிக்கை. 

 • இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் (Tata AIA), அதிக எண்ணிக்கையிலான மதிப்பீடுகளை பெற்று MDRT Advisors நிறுவனத்தின் தரவரிசையின் படி தகுதியுள்ள ஆலோசகர்களுக்கான உலகளவில் 5வது இடத்தையும், இந்திய அளவில் ஒப்பிடும்போது முதல் இடத்தையும் பிடித்துள்ளது என தனது செப்டம்பர் 2023 அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • ஆயுள் காப்பீட்டுத் துறையில் அவர்களின் அறிவு மற்றும்  நிபுணத்துவத்தின் அளவு ஆகிய மதிப்பீடுகளை கருத்தில் கொண்டு, இந்த தரவரிசை பட்டியலானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். இந்திய நிறுவனம் முதல் முறையாக இந்த உலகின் முன்னணியில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான வருணா கடற்படை பயிற்சியானது தொடக்கம்.

 • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு கடற்படை பயிற்சியின் கட்டம் II ஆனது அரபிக்கடலில் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது என இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்த ஆண்டிற்கான இந்த பயிற்சியானது வருணாவின் 21வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதன் முதற்கட்ட பயிற்சியானது இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பில் ஜனவரி 16 முதல் ஜனவரி 20 வரை நடத்தப்பட்டுள்ளது.
 • இரு கடற்படைகளின் பிரிவுகளும் தங்களின் போர் திறன்களை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்து இயங்கும் திறனை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

பாரத மண்டபத்தில் இந்திய பழங்குடியினருக்கான பெவிலியன் ஆனது அமைக்கப்பட்டுள்ளது.

 • 2023 ஆம் ஆண்டிற்கான மற்றும் 18 ஆவது G-20 தலைவர்கள் உச்சி மாநாடானது செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் தேசிய தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ள மாபெரும் பாரத் மண்டபத்தில் ஒரு பகுதியாக, கைவினைப் பொருட்கள் பஜாரில்(Crafts) கண்காட்சியானது அமைக்கப்பட்டுள்ளது.
 • பாரம்பரிய பழங்குடியினரின் கலைப்பொருட்கள், ஓவியங்கள், ஜவுளிகள், மட்பாண்டங்கள், இயற்கை பொருட்கள் மற்றும் பலவற்றை ‘டிரைப்ஸ் இந்தியா’ என்ற பெயரிடப்பட்ட பெவிலியனில் காட்சிப்படுத்துகிறது. இது இது பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா அமைப்பால்(TRIFED) மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அலிஃப் பே அறிமுகம்.

 • மத்திய ஆசியா சார்ந்துள்ள பிராந்தியங்களில் முன்னணி ஃபின்டெக் நிறுவனமாக உள்ள அலிஃப் நிதி சேவை நிறுவனமானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் அலிஃப் பேவை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • அலிஃப் பே முன்னெடுப்பை UAE இல் அறிமுகப்படுத்தியதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை குறிவைத்துள்ளது என வணிகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனமானது 2014 இல் தஜிகிஸ்தானில்  தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் சிக்கனமான நிதித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு நிறுவப்பட்டுள்ளது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து இடையே புதிய மூலோபாய ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் செப்டம்பர் 09 2023 அன்று நடைபெற்றுள்ள ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் பகுதியாக இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஒரு புதிய மூலோபாய கூட்டுறவு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளார்.
 • இரு நாட்டு பொருளாதாரங்களுக்கும் இடையிலான வேலை வாய்ப்புகளையும் அதன் மேம்பாட்டு வளர்ச்சியையும் உருவாக்குதல், “புதிய மற்றும் நவீன” இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை அதிகரித்தல், பாதுகாப்பு தொடர்பான இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வியூகங்களை வகுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த கூட்டாண்மை ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

ஹரித்வாரில் பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு அம்மாநில முதல்வர் தாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

 • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பல்லா மைதான வளாகத்தில் கிட்டத்தட்ட ரூ.941.39 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி செப்டம்பர் 08 2023 அன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
 • இந்த மேம்பாட்டு திட்டங்களானது ஹரித்வார் – ரூர்க்கி மேம்பாட்டு ஆணையத்தால்(HRDA) மேற்கொள்ளப்படும் என  அம்மாநில முதல்வர் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
 • மேலும் கிரிக்கெட், கால்பந்து ஆடுகளம் மற்றும் டென்னிஸ் மைதானங்கள், நகர விளையாட்டு வளாகத்தில் பேட்மிண்டன் மைதானத்தை பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மாநில விளையாட்டு துறையினை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

நியமனங்கள்

கோல்ட் லைன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தாஜ் நியமனம்.

 • கனடா நாட்டை சார்ந்த புகழ்பெற்ற Gold Line Resources Ltd நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சார்ந்த தாஜ் சிங் என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • 22 ஆண்டுகளுக்கும் மேலான சுரங்க மற்றும் தங்க வளத் துறையில் அனுபவத்தை கொண்டுள்ள இவர் இந்த நியமனத்திற்கு முன்பாக  Discovery Silver Corp மற்றும் OA Lithium Brines ஆகிய நிறுவனங்களில் CEO மற்றும் COO உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

L’Oréal பிராந்திய நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளி – மனாஷி நியமனம்.

 • உலக புகழ்பெற்ற அழகுப்படுத்துதல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் L’Oréal நிறுவனமானது அதன் UK மற்றும் அயர்லாந்து சார்ந்த பிராந்தித்திற்கு நுகர்வோர் பொருட்கள் பிரிவின் தலைமை நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளியை சார்ந்த மனாஷி குஹாவை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இவர் அக்டோபர் 1, 2023 அன்று இந்த பதவியில் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சார்ந்த இந்த நிறுவனமானது இந்த நியமனத்தின் மூலம் அந்த குறிப்பிட்ட பிராந்திய பகுதிகளின் வர்த்தக மேம்பாட்டை உறுதிப்படுத்துவார் என எதிர்பாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாஸ்டர்ஸ் தடகள அமைப்பின் தலைவராக சுமதி நியமனம்.

 • ஆந்திரப் பிரதேச மாஸ்டர்ஸ் தடகள அமைப்பின் தலைவராக அரிகட்லா சுமதி என்பவரை நியமித்துள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்த நியமனமானது பெங்களூரில் செப்டம்பர் 6 அன்று நடைபெற்றுள்ள இந்திய மாஸ்டர்ஸ் தடகள அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் இந்த நியமனத்தின் மூலம் அமைப்பில் உள்ள சிக்கல்களை களைந்து அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.

விருதுகள்

2023 ஆம் ஆண்டிற்கான NBFCக்கான சிறந்த டிஜிட்டல் தீர்வுகள் விருதை eDAS பெற்றுள்ளது.

 • க்ரிப்டன் பிசினஸ் மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மதிப்புமிக்க 2023 ஆம் ஆண்டிற்கான NBFC தலைமை விருதுகள் விழாவில் “NBFC-க்கான சிறந்த டிஜிட்டல் தீர்வுகள் வழங்குநர்” என்ற பிரிவின் கீழ் விருதை யுரேகா டிஜிட்டலைசேஷன் மற்றும் ஆட்டோமேஷன் சர்வீசஸ்(eDAS) நிறுவனமானது வென்றுள்ளது.
 • NBFC தலைமை விருதுகளானது NBFC மற்றும் Fintech துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், அதற்கு பணியாற்றிய முக்கிய பங்குதாரர்கள், சிந்தனைத் தலைவர்கள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் ஆகியோர்களை மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதினை பல்வேறு நிறுவங்களுக்கு வழங்கி வருகிறது.

முக்கிய தினம்

உலக முதலுதவி தினம் 2023

 • ஒருவருக்கு விபத்து அல்லது காயம் ஏற்பட்டால், அவருக்கு உடனடியாக வழங்கப்படும் உதவிக்கு முதலுதவி என்று பெயர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையானது “உலக முதலுதவி தினமாக” கடைப்பிடிக்கப்படுகிறது. 
 • எனவே இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையானது செப்டம்பர் 9அன்று இந்த தினமானது பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது. முதலுதவி என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைத் திறன் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் இதனை பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு வழங்குவதையும் நோக்கமாக கொண்டு இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக தற்கொலை தடுப்பு தினம் 2023

 • தற்கொலை என்பது பலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எடுக்கும் ஒரு தீவிரமான மற்றும் பிற்போக்கான முடிவு ஆகும். இந்த உலகில், ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட அளவிலான மக்கள் தங்கள் வாழ்க்கையை முடிப்பதற்கான முடிவை எதிர்கொள்கின்றனர். தற்கொலை என்பது ஒரு தீவிர முடிவு மற்றும் பல காரணங்களால் நிகழ்வதற்கான வழிகளாய் அமைகின்றன.
 • அதன்படி நிதி சார்ந்திருத்தல், மன அதிர்ச்சி அல்லது வறுமை அல்லது வேறு ஏதாவது  காரணங்கள் மட்டும் நம்மை சார்ந்ததல்ல, மேலும் வாழ்க்கையில் உள்ள உன்னதத்தை புரிந்து மக்களுக்கு கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாளானது உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  
 • Creating Hope through Action என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!