WPL 2025: DC vs MI இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்..? WPL-ல் புதிய சாதனை படைக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்..

0
WPL 2025: DC vs MI ??????? ?????????? ???????????? ????..? WPL-?? ????? ????? ????????? ?????? ???????????..
WPL 2025: DC vs MI இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்..? WPL-ல் புதிய சாதனை படைக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்..

WPL 2025: DC vs MI இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்..? WPL-ல் புதிய சாதனை படைக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்..

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. மேலும், ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியானது கடந்த பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐந்து முறை வென்று 10 புள்ளிகளுடன் லீக் கட்டத்தில் முதலிடம் பிடித்து WPL 2025 இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இறுதிப் போட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர திட்டம்…!! இன்று விண்ணில் ஏவப்பட்ட புதிய விண்கலம்..!!

அதாவது, “மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் WPL 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (15-03-2025) மோதுகின்றன. இப்போட்டியானது மகாராஷ்டிராவில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி (IST) இரவு 8:00 மணிக்குத் தொடங்குகிறது என BCCI தெரிவித்துள்ளது”. மேலும், முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!