சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர திட்டம்…இன்று விண்ணில் ஏவப்பட்ட புதிய விண்கலம்

0
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர திட்டம்...இன்று விண்ணில் ஏவப்பட்ட புதிய விண்கலம்
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர திட்டம்...இன்று விண்ணில் ஏவப்பட்ட புதிய விண்கலம்

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர திட்டம்…!! இன்று விண்ணில் ஏவப்பட்ட புதிய விண்கலம்..!!

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி ஆய்வுக்காக சென்றனர். மேலும், 10 நாட்கள் ஆய்வுக்கு பின் அவர்கள் பூமிக்கு திரும்புவதற்காக, ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர்  விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல், கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ளனர்.

சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஐபோன்கள்…!! உடனே அப்டேட் செய்யுமாறு ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு…!!

மேலும், தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து வர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசா ஒன்றிணைந்து ஒரு ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அதாவது, டிராகன் ரக விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட்டுகள் மூலம் 4 விஞ்ஞானிகளுடன்  இன்று அதிகாலை 4.33 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அழைத்து வர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!